ஆசைமுகம் மறந்து போச்சே, இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதில்
கண்ணன் அழகு முழுதில்லை;
நன்னு முகவடிவு காணில், அந்த
நல்லவல்ல சிரிப்பை காணோம்
கண்ணன் முகம் மறந்து போனால், இந்த
கண்கள் இருந்து பயனுண்டோ
வண்ண படமுமில்லை கண்டாய், இனி
வாழும் வழி என்னடி தோழி
-
பாரதியார்
Wednesday, July 15, 2009
Saturday, May 09, 2009
புதிய பறவை - உன்னை ஒன்று கேட்பேன்
உன்னை ஒன்று கேட்பேன் ... உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் ?
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை
நிலவில்லா வானம் ... நீரில்லா மேகம்
பேசாத பெண்மை... பாடாத உண்மை
கண்ணை மெல்ல மூடும் ... தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும் ?
தனிமையில் கானம் .. சபையிலே மௌனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் ... அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் ?
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் ?
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை
நிலவில்லா வானம் ... நீரில்லா மேகம்
பேசாத பெண்மை... பாடாத உண்மை
கண்ணை மெல்ல மூடும் ... தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும் ?
தனிமையில் கானம் .. சபையிலே மௌனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் ... அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் ?
Subscribe to:
Posts (Atom)
