கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னஞ்சிரிப்பில் ஒரு கள்ளச்சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகுழ்வேனே மாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னஞ்சிரிப்பில் ஒரு கள்ளசிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
இனி இந்த வூனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலும் உன்னோட வாழ
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகுழ்வேனே மாற்றி
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னஞ்சிரிப்பில் ஒரு கள்ளச்சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்
இப்போது இந்த பாட்ட நம்ம youtube ல பாருங்க
lyrics via Tamil Lyrics

No comments:
Post a Comment