
கன்னத்தில் முத்தமிட்டால்
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறு முக சிரிப்பில்
(வெள்ளை பூக்கள்..)
காற்று பெசயின் மழை பாடும் பாடங்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ
(வெள்ளை பூக்கள்..)
எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே
(வெள்ளை பூக்கள்..)

No comments:
Post a Comment