என்னோட அப்பா கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்கு பூஜை பன்னர்துண்டு. இன்னிக்கும் வழக்கம் போல பூஜை பண்ணாரு. நா சின்ன வயசுல அவரு கூடபூஜைக்கு உக்காரர்த்து வழக்கம். இன்னிக்கும் அவரு கூட உக்காந்து என்ன பன்ன்ராருன்னு பார்த்தேன். அவரு சொல்லற ச்லோகத்ல, கொஞ்சம் ருத்ரம் லயும் இருந்துது. முதல்ல சொன்னதெல்லாம் எதோ கணபதி பூஜை.. எல்லா பூஜைக்கும் பண்ணனுமா. அதுக்கு அப்பரம், அவரு எதோ installation பண்ணாரு. அந்த விக்ரஹத்துல சாமிய install பண்ணனுமாம். அதுக்கு அப்பரம் அதுக்கு பூஜை பண்ணனுமாம். அதுக்கு அப்பரம் அவரு சொன்ன ச்லோகத்துல கொஞ்சம் கதையும் இருந்துது... கிருஷ்ணர் எப்படி பாண்டவர்களை காப்பதினாறு, எப்படி பொறந்தாரு .. இது தான் அந்த ச்லோகதுல இருந்துது. அதுக்கு அப்பரம் நாங்க பண்ண அவுல் பாயசத்த நல்ல சாப்டோம். அடுத்த நாள் காலேல uninstallation பண்ணாரு. இதுக்கு பேரு தான் புனர் பூஜை. இந்த மாதிரி நமக்கு தெரிஞ்ச பாஷைல சொல்லாம எதோ சாமி கண்ண குத்திடும்னு சொன்னா எப்படி எல்லாரும் புரிஞ்சு நடந்துப்பாங்க. முதல்ல எல்லா அப்பா அம்மா வாத்தியாருக்கும் software engineering சொல்லிக்குடுங்கப்பா !!
கடைசீல கிருஷ்ணருக்கு happy birthday சொல்ல மறந்துட்டேன். கிருஷ்ணா ஹாப்பி பர்த்டே !!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment